வடமேற்கு சிரியாவில்அமெரிக்க படை சனிக்கிழமையன்று (26) நடத்திய அதிரடி தாக்குதலில் ISIS தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என நம்பப்படுவதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்த இலக்கு தாக்குதலில் 48 வயதுடைய ISIS தலைவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கை மற்றும் கொல்லப்பட்டது தொடர்பான விவரங்கள் வெள்ளை மாளிகையில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.
சனிக்கிழமை (26) இரவு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் "மிகப் பெரிய விடயமொன்று சற்று முன்னர் நடந்துள்ளது!" என செய்தி வெளியிட்டிருந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லி, ஞாயிற்றுக்கிழமை (27) ஜனாதிபதி "முக்கிய அறிக்கையை" வெளியிடுவார் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: