News Just In

10/27/2019 09:39:00 AM

5 தமிழ் அரசியல் கட்சிகளையும் சந்திக்க பல்கலைக்கழக மாணவர்கள் அவசர அழைப்பு

பொது இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கும் ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் திங்கட்கிழமை (28) காலை 11 மணிக்கு யாழ்ப்பாணத்தில் சந்திப்பதற்கான அவசர அழைப்பினை பல்கலைக்கழக மாணவர் தரப்பினர் விடுத்துள்ளனர்.

இச் சந்திப்பில் 05 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய குழுவினர்கள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சந்திப்புக்களை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அதன் பின்னரான நகர்வுகள், ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு, அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவொன்றை தீர்மானிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒன்றாக முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் 13 அம்சக்கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: