News Just In

11/17/2026 03:01:00 PM

பிரதேச இலக்கிய விழாவில் புத்தாக்க வெளிப்பாடுகள்

பிரதேச இலக்கிய விழாவில் புத்தாக்க வெளிப்பாடுகள்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் நிருவாகத் தலைவருமாகிய யூ. உதயசிறீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்களன்று (16) இடம்பெற்றது.

பிரதேச மட்டத்திலான கலை இலக்கியத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக கவிதை, சிறுகதை, பாடல் நயத்தல், கதை சொல்லுதல் போன்ற வாய்மொழி மூலமான போட்டிகள் பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, கனிஷ்ட பிரிவு, சிரேஷ்ட பிரிவு, அதி சிரேஷ்ட பிரிவு மட்டங்களிலும், திறந்த பிரிவில் சிறுகதை, மரபு, புதுக்கவிதை சிறுவர் கதை ஆக்கம், திரைப்பட விமர்சனம் என பல போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த போட்டி நிகழ்வுகளில் பிரதேச செயலக பிரிவிலிருந்து மாவட்ட மட்டத்திலும் தேசிய ரீதியிலும் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களது கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments: