மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் கடற்கரைப் பிரதேசத்தில் 25,000 பனை விதைகள் நாட்டும் பணி பனை அபிவிருத்திச் சபையின் மாவட்ட முகாமையாளர் ரீ. விஜயன் தலைமையில் செவ்வாயன்று (17) முன்னெடுக்கப்பட்டது.
பனை அபிவிருத்திச் சபையும் பிளட்ஜ் ரெஸ்டோர் பவுண்டேஷனும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் பனை விதைகளை நடும் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதன் மூலம் மாவட்டத்தில் பனைசார் உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல், பனை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பனைசார் உற்பத்திகள் ஊடாக உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
பனை விதைகள் நாட்டும் நிகழ்வில் பிளட்ஜ் ரெஸ்டோர் பவுண்டேஷனின் திட்ட இணைப்பாளர் எஸ். தேவசந்திரன், மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments: