
இலங்கையின் அநுராதபுரத்தில் தாயார் உயிரிழந்த சில மணி நேரத்திலேயே, சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் அப்துல் ஹமீட் முஹம்மட் இப்ஹாம் இன்று (16) காலை காலமான சம்பவம் ஊடகத்துறை மற்றும் அநுராதபுர பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹமீத் மற்றும் நொச்சியாகம முஸ்லிம் வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபரான ஹசன் பீவி ஹமீட் அவர்களின் புதல்வரும் ஆவர். தயாரான ஹசன் பீவி (வயது 77) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) காலமானார். தாயாரின் பிரிவால் ஏற்பட்ட அதிர்ச்சியையும் துயரத்தையும் தாங்க முடியாமல், அவரது மகனும் பிராந்திய ஊடகவியலாளருமான அப்துல் ஹமீட் முஹம்மட் இப்ஹாம் (வயது 44) நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 16) காலை காலமானார்.
காலமான இப்ஹாம், அநுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.எச். தம்ஸீர் ஹமீட்டின் சகோதரர் ஆவார். (மறைந்த ஹசன் பீபி ஹமீட், ஏ.எச். தம்ஸீர் ஹமீட்டின் தாயாரும் ஆவார்).
1982 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி நொச்சியாகமவில் பிறந்த இப்ஹாம், நொச்சியாகம அல்-ஹிக்மா மகா வித்தியாலயம் மற்றும்அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல தேசிய ஊடகங்களின், குறிப்பாக News1st இன் அநுராதபுர பிராந்திய செய்தியாளராகவும், மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
செய்தி சேகரிப்புடன் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாத இபாம், News1st உட்பட சிரச ஊடக வலையமைப்பின் பல்வேறு மக்கள் சேவை நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக ‘கம்மெத்த’ (Gammadda) செயற்பாட்டின் ஆரம்பம் முதல் கமராவுடன் கிராம வீதிகளில் நடந்து சென்று மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாகப் பங்களிப்புச் செய்தார்.
ஜனாஸா நல்லடக்கம் நேற்று (16) மஃரிப் தொழுகையுடன் நொச்சியாகம ஜும்ஆ பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
No comments: