மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச்(EDS) சங்கத்தின் உள்ளக விளையாட்டுக்கழகத்தினர்(EDS Indoor sports club)நடாத்தும் சதுரங்கம் ,கரம் விளையாட்டுக்களுக்கான மாபெரும்சுற்றுப்போட்டி .மேற்படி போட்டியானதுஇம்மாதம்28,29,30ம்திகதிகளில்புதியகல்முனைவீதி,நொச்சுமுனையில்அமைந்துள்ள கல்விஅபிவிருத்திச் சங்க(EDS) சிவநேசராசா மற்றும்சந்திரகாசன் மண்டபங்களில் நடைபெற உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 313 போட்டியாளரகள் பங்கு
பற்றும் இச் சுற்றுப்போட்டியில் பல்வேறு வயதுப்பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் இடம்பெற உள்ளது.பாடசாலை மாணவர்களை மையப்படுத்திநடைபெறும் இப்போட்டியில்வெற்றியாளர்களுக்குபணப்
பரிசு,வெற்றிக்கிண்ணங்கள்மற்றும் சான்றிதழ்களும்வழங்கப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (30/08/2026)நடைபெறும் இறுதி நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளரும் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பணிப்பாளருமான
ஞாயிற்றுக்கிழமை (30/08/2026)நடைபெறும் இறுதி நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளரும் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பணிப்பாளருமான
Dr இராசரெத்தினம்முரளீஷ்வரன் முதன்மை விருந்தினராகவும்
திரு சதாசிவம் சோபிதன்(Managing Director of Ceylon Growth Ltd)
திரு துரைராசாகஜேந்திரன்(உதவி பணிப்பாளர் தொழில் பயிற்சி
அதிகா ரசபை மன்னார் ,வவுனியா மாவட்டம் )
திரு கந்தசாமி கருணேஸ்வரன்(தலைவர் ஶ்ரீசித்தி விநாயகர் ,ஶ்ரீபேச்சியம்மன் ஆலயபரிபாலன சபை)ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகவும் கலந்துசிறப்பிக்க உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்
No comments: