News Just In

8/25/2026 01:32:00 PM

கட்டிடப் பராமரிப்புக்கென தனி நிதியம் உருவாக்க வேண்டும் – சாணக்கியன்

கட்டிடப் பராமரிப்புக்கென தனி நிதியம் உருவாக்க வேண்டும் – சாணக்கியன்





யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டுஅரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை பிரதேச சபையின் தலைவர்அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்படவுள்ள இந்த உள்ளக விளையாட்டு அரங்கு, வலிகாமம் தெற்குபிரதேசத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைவழங்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்றஅடிக்கல் நாட்டும் நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்சி.வி.கே. சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி
சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.
சாணக்கியன் இராசமாணிக்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்எஸ். சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர மேயர், வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள்உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைவர் அலுவலக வளாகத்திலேயே 330
மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாரிய உள்ளக விளையாட்டு அரங்கு
அமைக்கப்படவுள்ளது. இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நவீன
வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், பிரதேச மட்டத்தில்
விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய உட்கட்டமைப்புத்
திட்டமாகவும் இது அமையவுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் இராசமாணிக்கம், கட்டிடங்களைநிர்மாணிக்கும் போது அவை திட்டமிடப்பட்ட வடிவமைப்புக்கு ஏற்ப தரமாகவும்அழகாகவும் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கும் ஒப்பந்தக்காரர்கள், திட்டமிடப்பட்ட
வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப கட்டிடத்தை அமைக்க வேண்டும்என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்த பின்னர் அதன் பராமரிப்பு
தொடர்பிலும் ஆரம்பத்திலேயே திட்டமிடுவது அவசியம் என சாணக்கியன்
சுட்டிக்காட்டினார்.

சபையின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த தேர்தல் உடனடியாக
நடைபெறாமல் ஓரிரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான கால இடைவெளி
ஏற்படுமானால், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத சூழல்
உருவாகக்கூடும் என்றும், அவ்வாறான காலப்பகுதியில் கட்டிடங்களை முறையாகப்பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், கட்டிடத்தை நிர்மாணிப்பதுடன் அதனை எதிர்காலத்தில் தொடர்ந்து
பராமரிப்பதற்கென தனியான நிதியத்தையும் ஆரம்பத்திலேயே உருவாக்க வேண்டும்என அவர் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக, மின்விளக்குகள் மாற்றுதல் உள்ளிட்ட மாதாந்திர பராமரிப்புப்
பணிகளுக்குத் தேவையான நிதியை அந்த நிதியத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் சாணக்கியன் தெரிவித்தார்.

அவ்வாறு கட்டிடத்தின் தொடர்ச்சியான பராமரிப்புக்கென தனியான நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டால், கட்டிடம் நிர்மாணிக்கப்பட்ட பின்னரும் அதன்
தரத்தையும் அழகையும் தொடர்ந்து பேண முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தக் கோரிக்கையை வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷிடம் முன்வைத்த சாணக்கியன் இராசமாணிக்கம், தன்னை இந்நிகழ்வுக்குஅழைத்தமைக்கும் நன்றி தெரிவித்தார்.

புதிய உள்ளக விளையாட்டு அரங்கின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர்,அது பிரதேசத்தின் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களின்பயன்பாட்டுக்கு முக்கியமான வளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இவ்வாறான பாரிய உட்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதுடன்
நிறுத்திவிடாமல், அவற்றின் தரம் மற்றும் பயன்பாட்டை நீண்டகாலத்திற்கு
உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும்உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையே சாணக்கியன்இராசமாணிக்கம் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

No comments: