News Just In

7/06/2026 10:49:00 AM

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! பலர் காயமடைந்துள்ளதாக தகவல் - விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! பலர் காயமடைந்துள்ளதாக தகவல் - விசேட அதிரடிப்படையினர் குவிப்பு


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பல சிறை அதிகாரிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறைச்சாலையில் இன்று காலை (06) மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் சிறைச்சாலைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.

விளக்கமறியலில் இருந்த கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே இந்த மோதல் நடந்ததாக பொலிஸார் விளக்கமளித்திருந்தனர்.

இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் நேற்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று காலை மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: