நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மோதல் காரணமாக ஏற்பட்ட காயங்களுடன் சுமார் 100 பேர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
No comments: