News Just In

7/21/2026 02:10:00 PM

நிதிச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் நியமனம்


நிதிச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக கே. கருணாகரன் நியமனம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நிதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் திங்களன்று (20.07.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணைக்குழவின் புதிய தலைவராக என். ஆர். அனீஸ், உறுப்பினர்களாக ஜே.எம்.சி.ஜே. விஜேதுங்க உட்பட கே. கருணாகரனும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்

No comments: