News Just In

7/16/2026 04:03:00 PM

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு - நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு - நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு




எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மனுவை முழுமையான விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

No comments: