News Just In

7/24/2026 11:06:00 AM

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை



யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (24)முன்னிலையாகத் தவறியதையடுத்து, இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​அவரது பிணையாளர்களும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது

No comments: