மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
“சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை" எனும் தேசிய வீட்டு வசதி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நான்காவது கட்ட காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ. சுபாஸ்கரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்களன்று 06.07.2026 நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள், போரதீவுப் பற்று பிரதேச சபை உறுப்பினர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளுக்கு ஐந்து கட்டமாக நிதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் மாவட்டத்தில் அனைத்து வீட்டுத்திட்டங்களையும் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வருடம் இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 445 வீடுகளுக்கும் 2015ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டிலும் இடை நடுவில் நிறுத்தி வைக்கப்பட்ட 133 வீடுகளுக்கான நிதியை தேசிய வீடமைப்பு அதிகார சபை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: