– நூருல் ஹுதா உமர்
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) ஏற்பாட்டில் 08 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மருதமுனை பிரீமியர் லீக் (MPL) 2026 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்று (03) மாலை மருதமுனை மஷ்ஹூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஏ. மனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக ஏ.எச்.எம். பாரிஸ், டாக்டர் எம்.எச்.எம். முனாசீக் ஆகியோர் கலந்து கொண்டதுடன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், சமட் ஹமீட், துறைமுக அதிகார சபை முன்னாள் உத்தியோகத்தர் ஏ.ஆர். சமீம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கழக நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் PLT தண்டர்ஸ் அணி, டில்கோ சூப்பர் கிங்ஸ் அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி MPL 2026 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய PLT தண்டர்ஸ் அணி, 7 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களை பெற்றது. அந்த அணியின் சார்பில் பசான் 21 ஓட்டங்களையும், எம்.எஸ்.எம். ஹனான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
52 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய டில்கோ சூப்பர் கிங்ஸ் அணி, 7 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டங்கள் மட்டுமே பெற்றதால் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் சார்பில் முஹாஸ் அப்துல் 23 ஓட்டங்களையும், சஜத் கபூர் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் சிறப்பாக விளையாடிய எம்.எஸ்.எம். ஹனான் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மருதமுனையில் மின்னொளி வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருப்பது அப்பிரதேச மக்களின் நீண்டகால கனவு நனவான தருணம் எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மருதமுனை எப்போதும் மாவட்டத்திற்கு விளையாட்டுத் துறையில் புகழ் சேர்க்கும் மண்ணாக இருந்து வருவதாகவும், மின்னொளி மைதானத்தை அமைப்பது நீண்டகால இலக்காக இருந்ததாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தன்னால் முன்னெடுக்கப்பட்டதாகவும், அப்போதைய மக்கள் பிரதிநிதிகளாக இருந்த முன்னாள் மேயர் ஏ.எம்.ரகீப், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.எம். நவாஸ், எம்.எஸ்.எம்.முஸ்தபா, சமட் ஹமீட் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பினால் இந்த மைதானத்தை இப்படி உருவாக்க முடிந்து சிறந்த தரத்திற்கு உயர்த்தும் முயற்சி வெற்றியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மருதமுனையில் கடினப்பந்து கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் சம்ஸ் மத்திய கல்லூரி மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்காக தன்னால் 80 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அல்-மனார் கல்லூரி மைதான அபிவிருத்திக்கும் நிதி வழங்கப்பட்டதாகவும் ஹரீஸ் குறிப்பிட்டார். இந்த இரண்டு மைதானங்களின் அபிவிருத்திப் பணிகளும் முழுமையடைந்தால், எதிர்காலத்தில் மருதமுனையிலிருந்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குத் திறமையான கடினப்பந்து வீரர்கள் உருவாகும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இறுதிப்போட்டியைத் தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் தனிநபர் விருதுகள் வழங்கப்பட்டன. போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்திய மருதமுனை கிரிக்கெட் சம்மேளனமும் MPL 2026 ஏற்பாட்டுக் குழுவும் பாராட்டப்பட்டன. உள்ளூர் கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொணரவும், மருதமுனையை இலங்கையின் முக்கிய கிரிக்கெட் மையங்களில் ஒன்றாக உருவாக்கவும் MPL தொடர் முக்கிய பங்காற்றி வருவதாக நிகழ்வில் கலந்துகொண்ட விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments: