News Just In

6/27/2026 10:30:00 AM

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று காலை காலமானார்

 பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73.



தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பாக்யராஜ். இவர், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தவர் பாக்யராஜ். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். ஆரம்பத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவருக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர். நலமாக இருந்த பாக்யராஜ் இன்று திடீரென மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments: