News Just In

6/27/2026 05:45:00 AM

முதுகுளத்தூர் அருகே 5,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, குறியீடுகள் கண்டெடுப்பு!

முதுகுளத்தூர் அருகே 5,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, குறியீடுகள் கண்டெடுப்பு



கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, குவளை. 

ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் அருகே 5,000 ஆண்​டு​கள் பழமை​யான பெருங்​கற்​காலத்​தைச் சேர்ந்த முது​மக்​கள் தாழிகள், மட்​கலக் குறி​யீடு​கள் கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ளன.

முதுகுளத்​தூர் தாலு​கா​வில் வலசை மற்​றும் மணக்​குளம் ஆகிய ஊர்​களுக்கு இடையே​யுள்ள அய்​ய​னார், தர்ம முனீஸ்​வரர் கோயில் வளாகத்​தில் சுற்​றுச்​சுவர் எடுக்க குழி தோண்​டிய​போது, முது​மக்​கள் தாழிகள் வெளிப்​பட்​டன. இதுபற்றி பெருங்​கருணை​யைச் சேர்ந்த மாரி, வேல்​முரு​கன் ஆகியோர் அளித்த தகவலின்​பேரில், ராம​நாத​புரம் தொல்​லியல் ஆய்வு நிறு​வனத்​தின் தலை​வர் வே.​ராஜகுரு அங்கு சென்று ஆய்வு செய்​தார்.

பின்​னர் அவர் கூறிய​தாவது: கோயில் சுற்​றுச்​சுவர் எடுக்​கத் தோண்​டிய​போது வெளிப்​பட்ட ஒரு தாழிக்​குள் 3 குவளை​கள், தட்​டு, கிண்​ணம், கும்​பா, சிறிய பானை ஆகியவை இருந்​துள்​ளன. இவை கருப்பு சிவப்​பு, சிவப்பு நிற​முடையன. முது​மக்​கள் தாழிகள் வெளிவந்த பகு​தி​யில் ஆய்வு செய்​த​போது, உடைந்த சுடுமண் தாங்​கி​கள், மூடிகளில் குறி​யீடு​கள் இருந்​தன. பெருக்​கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறி​யீடு​கள் 3 சிவப்பு நிற ஓடு​களி​லும், 7 கருப்பு சிவப்பு ஓடு​களி​லும் உள்​ளன.

இவை கி.​மு.4000 முதல் கி.​மு.1500 வரையி​லான பெருங்​கற்​காலத்​தின் தொடக்​கத்​தில் இறந்​தவர்​களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடு​களில் போட்​டு​விடு​வர். அதை நரி, கழுகு போன்​றவை இரை​யாய் கொண்​டபின் கிடக்​கும் எலும்​பு​களை சேகரித்​து, அவற்​றுடன் அவர்​கள் பயன்​படுத்​திய அல்​லது படையல் பொருட்​களை சிறிய முது​மக்​கள் தாழி​யில் வைத்து மூடி அடக்​கம் செய்​துள்​ளனர்.

பிற்​காலத்​தில் பெரிய தாழிக்​குள் உடலை வைத்து அடக்​கம் செய்​யும் முறை இருந்​துள்​ளது குறிப்பிடத்தக்கது. தாழிக்​குள் இருந்த கருப்பு சிவப்பு மட்​கலங்​கள் அடர் வண்​ணத்​துட​னும், வழு​வழுப்​பாக​வும், பளபளப்​பாக​வும் உள்​ளன. இவற்​றைச் சுடும்​போது அதன் மேல் உப்பு தூவி பளபளப்​பாக ஆக்​கி​யுள்​ளனர்.

மலைப் பகு​தி​களில் காணப்​படும் பெருங்​கற்​படைச் சின்​னங்​களை விட, சமவெளிப் பகு​தி​களில் உள்ள சிறிய தாழிகள் காலத்​தால் முந்​தி​யவை என்​ப​தால், இவை சுமார்​ 5000 ஆண்​டு​கள்​ பழமை​யானவை எனலாம்​.

No comments: