
சுவிச்சிலாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் அவுஸ்ரேலியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை இந்த வாரம் மேற்கொண்டிருந்தனர்.
இவ் இராஜதந்திரிகள், கிழக்கு மாகாணத்திலுள்ள உயர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் சார்பில் இவ்வமைப்பின் பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதிப் பணிப்பாளர் அழகுராசன் மதன் ஆகியோரையும் நேற்றைய தினம் (10.06.2026) சுவிச்சிலான்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்தார்.
நேற் றைய தினம் (11.06.2026) மட்டக்களப்பில் உள்ள அரச சார்பற்ற நிறுவனத்தில் வைத்து அவுஸ்ரேலியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தித்திருந்தார்.
இவ் இரு சந்திப்புக்களின் போதும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை சார்ந்த சவால்கள், நில உரிமை பிரச்சினைகள், வாழ்வாதார மீட்பு தேவைகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கப்படும் நீதி மற்றும் அரசியல் தீர்வு என்ன என்பது தொடர்பாகவும் இவ் இரு வெளிநாட்டு இராஜதந்திரிக்களிடம் வலியுத்தி கூறப்பட்டது.
இதன்போது AHRC குழுவினரால் கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் அடங்கிய ஆவணம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments: