News Just In

6/05/2026 10:48:00 AM

இன்று எரிவாயு விலை திருத்தம்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

இன்று எரிவாயு விலை திருத்தம்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு



ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (05) அறிவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைவாக, அதற்குரிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதத்தில் லாஃப்ஸ் நிறுவனம் விலையை உயர்த்திய போதிலும், லிட்ரோ நிறுவனம் எந்த விலையிலும் திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் விலையை நிலையாகப் பேண நடவடிக்கை எடுத்தது.

மேலும் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப இந்த ஆண்டு எரிவாயு விலைகளைத் திருத்தியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: