(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர், அலிகார் தேசியக் கல்லூரியின் 115 வருட காலத்தில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 13 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ” தரச் சித்திகளைப் பெற்றுள்ளதோடு மொத்தம் 121 பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் பெறுபேறுகளின் அடிப்படையில் அலிகார் தேசியக் கல்லூரி தேசிய மட்டத்தில் ஏழாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
இவ்விதம் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று அலிகார் தேசியக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து கௌரவித்து, பாராட்டி, அவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு கல்லூரி கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் எம்.எம். மௌஜுத் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும், அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனக் குழுவின் சிரேஷ்ட பொறியியலாளருமான ஏ.எம். ஹக்கீம், அஞ்சல் திணைக்களத்தின்; உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் கே. பாத்திமா ஹஸ்னா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் முஹம்மத் சாலி ஹாஜியார் உட்பட கல்வியாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர்ப்பிரமுகர்கள், வரலாற்றுக் கல்விச் சாதனை சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: