2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இதனால், ஆண்டுச் செலவினம் முந்தைய கணிப்புகளைத் தாண்டி கணிசமாக உயரக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், வாகன இறக்குமதி செலவுகள் ஆண்டு இறுதிக்குள் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரரை எட்டி, கடந்த ஆண்டின் 2 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு செலவினம் ஏற்கனவே எதிர்பார்ப்புகளை மீறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்:
இறக்குமதிச் செலவு அதிகரித்து வந்தபோதிலும், அரசாங்கத்தின் வரி வருவாய் இலக்குகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலை மற்றும் அதன் விளைவாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்தமையே இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கு முதன்மைக் காரணம் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எரியூபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயத் தேவை அதிகரித்துள்ளமையினால் ரூபாவின் மீது தற்காலிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து மேலும் விளக்கிய மத்திய வங்கி ஆளுநர்,
2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா 4.8 சதவீதத்தினால் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், எண்ணெயைச் சார்ந்துள்ள ஏனைய நாடுகளான இந்தியா (6.4%), நேபாளம் (6.2%), மற்றும் இந்தோனேசியா (5.2%) ஆகிய நாடுகளின் நாணயங்கள் இலங்கை ரூபாவை விடவும் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளன என்றார்.
தற்போதைய நாணய வீழ்ச்சியானது இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல. இது எண்ணெயை முழுமையாக இறக்குமதி செய்து, அதற்காக அதிக செலவு செய்யும் பல நாடுகளைப் பொதுவாகப் பாதித்துள்ள உலகளாவிய பொருளாதார அதிர்ச்சியின் விளைவாகும்.
2022 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகளால் ரூபா வீழ்ச்சியடைந்தது. ஆனால், தற்போதைய நிலைமை அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது," என்று ஆளுநர் தெளிவுபடுத்தினார்.

மேலும், நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் தற்காலிக மாற்றங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக முடிவெடுப்பது தவறான கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய இந்த மாற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதியன்றே டொலரின் விற்பனை விலை 334.22 ரூபாயாகப் பதிவாகியிருந்தது. அதன்பின்னர் பதிவான மிக உயர்ந்த விற்பனை விலையாக இன்றைய விலை அமைந்துள்ளது. அதேபோல், கொள்வனவு விலையும் 2023 மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.
டொலரின் இந்த திடீர் விலையேற்றம் காரணமாக, நாட்டின் இறக்குமதிச் செலவினங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

No comments: