.png)
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீ லாங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கரையோரப் பகுதியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளைக் கடற்கரையைச் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை(23) நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் குருக்கள்மடம் முகாம் படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், இதன்போது கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், இலங்கை இராணுவத்தின் குருக்கள்மடம் முகாம் படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பொலிசார், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இதன்போது கடற்கரையை சிரமதானம் மூலம் சுத்தம் செய்தனர்.
No comments: