News Just In

5/23/2026 04:24:00 PM

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணப்பைகள்

 கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணப்பைகள்


கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணப்பைகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது பல டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து (08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று (22) நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது உயிரிழந்துள்ள கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டில் அவரது இரண்டு பணப்பைகள் கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மேலும், கபில சந்திரசேனவின் கைபேசியை திறக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி வினவிய நிலையில், கைபேசியைத் திறப்பது குறித்த ஆலோசனைக்காக குற்றப் புலனாய்வுத்திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கைபேசியை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, மேலதிக வழக்கு விசாரணை இம்மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments: