சஜித்தின் மோசமான இனவாதப் போக்கு!
நேற்று பிக்குகள் சிலர் அநுர அரசுக்கு எதிராக கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். இதன்போது சிறிது காலம் அடக்கம் செய்யப்பட்டு இப்போது முழு மூச்சாக இனவாததில் இறங்கி இருக்கும் ஒரு கூட்டத்தை அங்கு பார்க்க கூடியதாக இருந்தது.
8 ஆயிரம் பிக்குகள் என்றார்கள் ஆனால் 300 ஐ கூட தாண்டவில்லை. கடைசியில் சம்மேளம் படுதோல்வி அடைந்தது.இதையெல்லாம் தாண்டி இந்த கூட்டத்துக்கு சஜித் சென்றிருந்தார்.
இந்த இனவாத கூட்டம் நாட்டில் மீண்டும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்த முழு மூச்சாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சஜித் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்றிருக்கிறார் என்றால் ஜனநாயகம், இன மத ஒற்றுமை பற்றி பாராளுமன்றத்தில் பாடம் எடுக்கும் அத்தனையும் வெறும் வாய் பேச்சு மாத்திரமா?
அதை விட கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி அந்த கட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் எப்படி பலஸ்தீனிய ஆதரவைப் பேசுகின்றார்?
அதே போல் இந்தக் கூட்டணியில் இருக்கும் ரவூப் ஹக்கீம், ரிசாத், மனோ கணேசன் தொடர்ச்சியாக எப்படி இனவாதத்திற்கு எதிராக பேசுகிறார்கள்?
தமிழரசுக் கட்சிகள் கூட ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தது.
சஜித்தின் இந்த மோசமான இனவாதப் போக்கை இவர்கள் யாரும் கண்டிக்க மாட்டார்களா.?
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரவளித்தவர்கள், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு சஜித்தை ஜனாதிபதியாக கொண்டு வர துடிக்கும் அவரது பக்த கோடிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் பொறுப்பு இருக்கின்றது.
ஆனால் வக்கற்ற இந்த அரசியல்வாதிளுக்கு மிஞ்சிருக்கும் தமது அரசியல் இருப்பை தக்கவைக்க அரசுக்கு ஏசுகிறார்கள்...
அவர்களது தொண்டர்கள் ஒருபடி மேலே சென்று அரசை கடித்துக் குதறுகிறார்கள். இதனால் இவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிட்டியாதா என்பது தெரியாது?
No comments: