News Just In

2/15/2026 05:41:00 PM

சமூக நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்க இறக்காமம் வந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

சமூக நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்க இறக்காமம் வந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்




நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல, இறக்காமம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் முதன்முறையாக இறக்காமம் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. தயாரத்தன, இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பி.பி. பிரியந்த உள்ளிட்ட பல பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக, போக்குவரத்து ஒழுங்கை வலுப்படுத்துதல், சுற்றுப்புறப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பணமோசடியில் இருந்து மக்களை பாதுகாத்தல், போதைப்பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்துதல் மற்றும் சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்த்தல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து அதிகாரிகளும் சமூக பிரதிநிதிகளும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இறக்காமம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பிற பள்ளிவாசல் தலைவர்கள், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எல். முஸினி, உதவி தவிசாளர் கே.எல். சமீம், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில், பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments: