News Just In

2/21/2026 09:13:00 AM

இலங்கையில் அம்பாறையில் அழியும் நிலையில் உள்ள சோழர்கள் காலத்து சான்று!

இலங்கையில் அம்பாறையில் அழியும் நிலையில் உள்ள சோழர்கள் காலத்து சான்று: சிதைவடையும் ஆலங்குளம் சிவன் ஆலயம்




இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் சிதைக்கப்பட்டு வரும் சூழலில், அம்பாறை மாவட்டத்தின் ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலச் சிவன் ஆலயம் ஒன்று அடையாளச் சிதைவு மற்றும் இயற்கை அழிவுகளை எதிர்நோக்கி நிற்கின்றது.



 அட்டாளைச்சேனையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம் குறித்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவகணேசன் தலைமையிலான ஆய்வுக்குழு விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் இவ்வாலயம் 11ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் நிலவிய சோழர் காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியை (Chola Style Architecture) ஒத்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு முழுமையான சிவன் கோயிலுக்குரிய அங்கங்களான கர்ப்பக்கிரகம் (கருவறை), அந்தராளம், முன் மண்டபம், பலிபீடம் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றின் எச்சங்கள் இன்றும் அங்கு அடையாளப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது 

No comments: