லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
1/08/2026 08:45:00 AM
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: