News Just In

1/08/2026 08:52:00 AM

யாழ்.ஆழ்வார் கோவிலுக்கு இலக்கு வைத்த பிக்கு!

யாழ்.ஆழ்வார் கோவிலுக்கு இலக்கு வைத்த பிக்கு!


யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குள் புத்தர் சிலை ஒன்று இருப்பதாக யாழ்ப்பாண நாக விகாரையினுடைய விகாராதிபதி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் கோயில் என்பது யாழ்ப்பாணத்தின் தனித்துவம் மிக்க அடையாளம்.

கடந்த வாரம் குறித்த விகாராதிபதி யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

மேலும், தையிட்டி பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தனியார் மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், புதிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் விகாராதி வல்லிபுர ஆழ்வார் கோயிலில் புத்தர் சிலை இருப்பதாக கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: