News Just In

1/30/2026 06:08:00 PM

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் புதிய மாணவர்களை வரவேற்கும் புதுமுக புகுவிழா

 கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் புதிய மாணவர்களை வரவேற்கும் புதுமுக புகுவிழா


நூருல் ஹுதா உமர்
கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் 2026 ஆம் கல்வி ஆண்டிற்காக தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் புதுமுக புகுவிழா நேற்று (29.01.2026) பாடசாலை வளாகத்தில் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளருமான எஸ். சுரேஷ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

மேலும், கௌரவ அதிதிகளாக எஸ். ஸ்ரீரங்கன், சீ. சந்திரேஸ்வரன் மற்றும் எஸ். தரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேவேளை, ஆன்மீக அதிதிகளாக கல்முனை புனித இருதய ஆலயத்தை சேர்ந்த அருட்தந்தை அருட்தந்தை பெடுரு ஜீவராஜ், கல்முனை புலவி பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த சிவஸ்ரீ கோபால நிரோஷன் குருக்கள் மற்றும் கல்முனை அல்-ஹாதி இஸ்லாமிய அரபுக் கல்லூரியைச் சேர்ந்த அஷ்-ஷேய்க் எம்.எச்.எம். இர்பாத் ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கு ஆன்மீக அருளுரைகளை வழங்கினர்.

மேலும், சிறப்பு விருந்தினராக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் கே. சாந்தகுமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். குறிப்பாக, 2026 கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக பாடசாலையின் வகுப்பறைகள் மாணவர்களின் பெற்றோரின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளமை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாகக் காணப்பட்டது.


No comments: