News Just In

1/30/2026 06:11:00 PM

யாழின் திடீர் பணக்காரர்கள்....லிஸ்ட் தரவா....ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொலிஸார் வயிற்றில் புளி!

யாழின் திடீர் பணக்காரர்கள்....லிஸ்ட் தரவா....ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொலிஸார் வயிற்றில் புளி!



யாழ்ப்பாணம் வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என பாராளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை பொலிஸாரை பார்த்து கேள்வி எழுப்பிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இடம்பெற்ற வலி. மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் எப்படி திடீர் பணக்காரர்கள் ஆனார்கள், பொலிஸார் எவ்வாறு அவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றனர் என மக்கள் காணொளி ஆதாரத்துடன் எமக்கு தந்துள்ளார்கள்.

திடீரென பணக்காரர்களுக்கு எதிராக நாங்கள் திடீர் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றோம். சங்கானை பிரதேச செயலர் பிரிவிலும் திடீர் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள் என எமக்கும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே அவ்வாறானவர்கள் குறித்தான தகவல்களை மேலும் எங்களுக்கு வழங்குங்கள். எங்களுக்கு கிடைத்த தகவல்களை நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்.

அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். பொலிஸாருக்கு முகவர்கள் இருக்கின்றனர். நாங்கள் அது குறித்து அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றோம் என்றார்.

இதன்போது சிதம்பரமோகன் கருத்து தெரிவிக்கையில், எங்கு எங்கு குற்றவாளிகள் இருக்கின்றார்களோ அவ்வளவு பேரும் பொலிஸாருக்கு நண்பன்.

அவ்வாறு தொடர்புகளை பேணுபவர்கள் தான் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருக்கின்றனர்.

இந்த பொலிஸாரை கதிர்காம பக்கம் இடமாற்றம் செய்து விட்டால் அங்கு போய் சிங்களவர்களுக்கு சேவை செய்வார்கள் என்றும் கூறினார்.

No comments: