நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.மசூத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க அவர்களால் இன்று (22) வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார சேவையில் அனுபவமிக்க வைத்தியராக அறியப்படும் டாக்டர் ஏ.பி.மசூத் அவர்களின் இந்த நியமனம், அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் நிர்வாக செயல்திறன் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற் சங்கமொன்றின் அழுத்தங்களுக்காக, அரச உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்ய முடியாது என்று, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றதுள்ளது.
இதன் காரணமாக கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் சங்க பணிப் புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
No comments: