News Just In

1/27/2026 06:08:00 AM

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் புதுமுக மாணவர்களுக்கு வரவேற்பு விழா!

 சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் புதுமுக மாணவர்களுக்கு வரவேற்பு விழா




நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில், 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 6க்கு அனுமதி பெறும் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று  (26) பாடசாலை முன்றலில் விமர்சையாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஜஹ்பர் அவர்களின் வழிகாட்டலில், உதவி அதிபர் எம்.எச்.லாபிர் அவர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், இப்பாடசாலையின் பழைய மாணவரும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரியுமான எம்.எம்.அஹமட் சனூன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையொன்றை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம் மற்றும் இலக்கை நோக்கிய முயற்சி குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்வின்போது, புதுமுக மாணவர்கள் ஆசிரியர்களால் மாலை அணிவித்து அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், பரிசுகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். இந்நிகழ்வு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாக குறிப்பிடத்தக்கது.

No comments: