News Just In

1/09/2026 06:15:00 PM

அரசின் அமைச்சர்கள் செயல்திறன் இல்லாது இருக்கின்றார்களா..!இரா சாணக்கியன்

அரசின் அமைச்சர்கள் செயல்திறன் இல்லாது இருக்கின்றார்களா..!இரா  சாணக்கியன் 


இன்றைய தினம் 09.01..2025 பாராளுமன்ற கேள்வி பதிலின் போது.
அமைச்சர் ஏனைய மாவட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் நீங்கள் ஒப்பிட முடியாது. மட்டக்களப்பு மாவட்டம் ஆனது வாவியால் சூழ்ந்து படுவான்கரை மற்றும் எழுவான்கரை என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மாவட்டங்களில் இருக்கும் பாலமும் இதுவும் நீங்கள் ஒன்றாகக் கருத முடியாது. அதே நேரத்திலேயே நீங்கள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத் தீர்மானம், மாவட்ட அபிவிருத்தி கூட்டத் தீர்மானம் வேண்டும் என்று சொல்கிறீர்கள். இது சம்பந்தமாக ஏற்கனவே தீர்மானங்கள் எடுத்து உங்களுடைய அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கௌரவ அமைச்சர் அவர்களே. நீங்கள் பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானம் என்று சொன்னதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேசத்தில் சமுலையடி வட்டை என்ற பாதை 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அந்த வீதி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைத்தபோது அந்த நேரத்திலேயே இல்லை அந்தப் பாதைக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டதாக அதிகாரிககளினால் சொல்லப்பட்டது.


இன்றைக்கு வரைக்கும் 2025 வெள்ளத்தில் அந்தப் பாதை உடைக்கப்பட்டுகாணப்படுகின்றது. எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை பற்றி பல தடவை பேசியிருக்கிறார்கள்.


இருந்தாலும் கூட அவ் காக்காச்சி வெட்டை வீதியை அபிவிருத்தி செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாங்கள் பேசி ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கியிருந்தார்கள். உங்களது செயல்திறன் இல்லாத செயல்பாடுகளினால் அதிலே ஒரு குறிப்பிட்ட அளவு நிதி இன்று மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு திரும்பிப் போயிருப்பதாக பிரதேச செயலாளர் சொல்கின்றார்.
பிரதேச மட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தீர்மானங்களை எடுத்து தீர்மானங்களை சமர்ப்பித்து நாங்கள் அமைச்சர்களோடு பேசி கூட்டங்களில் சண்டை பிடிச்சு இன்றுவரைக்கும் போரதீவு பிரதேசத்தில் இருக்கும் மக்களுக்கு அந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். பிரதேச மற்றும் மாவடட அபிவிருத்தி குழு கூட்ட தீர்மானம் வேண்டும் என்று நீங்கள் சொல்கின்றீர்கள் . இந்தத் தீர்மானங்களை எடுத்து நாங்கள் உங்களுக்கு வழங்கிய பிற்பாடும் கூட கிடைக்கப்பெற்றும் கூட அவ் நிதியை வைத்து வேலைத்திட்டத்தை முடிக்க முடியாத செயல்திறன் இல்லாத நபர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்றதை ஏற்றுக்கொள்றீங்களா? எமது மக்களை ஏமாத்துகின்றீர்களா.

No comments: