ஜனநாயகன் பொங்கல் வெளீயீடு இல்லை.. தலைமை நீதிபதி போட்ட தடை! அதிர்ச்சி தீர்ப்பு
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தில் கேவிஎன் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வந்தது. அதில் படத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் உடனே சென்சார் போர்டு வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்வதாக தெரிவித்தார்.
அதன் விசாரணை சற்றுமுன் தொடங்கி நடந்தது. அதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தார்.
மேலும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 21ம் தேதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை தள்ளிவைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.
இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை. இதனால் விஜய் ரசிகர்கள் மேலும் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகன் தயாரிப்பாளர் உடனே மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.
1/09/2026 06:19:00 PM
ஜனநாயகன் பொங்கல் வெளீயீடு இல்லை.. தலைமை நீதிபதி போட்ட தடை! அதிர்ச்சி தீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: