
பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மையற்றவை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கும் என்று சிலர் கூறும் கூற்றுக்கள் பொய்யானவை.
வெளிநாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலர் இந்த பொய்யான கூற்றுக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், 45 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நாட்டில் சீரற்ற காலநிலையின் கோர தாண்டவத்தால் பெருமளவான கோழிகள் உயிரிழந்தன. அத்துடன் பல பகுதிகளில் பாதைகள் மூடப்பட்டதால் முட்டைகள் வியாபாரிகளுக்கு கிடைக்கும் அளவும் குறைந்த சந்தர்ப்பங்களும் பதிவாகியிருந்தன.
இவ்வாறான சூழலில் தொடர்ச்சியாக முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: