News Just In

12/16/2025 11:01:00 AM

தமிழர் பகுதியில் அநுரவின் எம்பிக்கு பெரும் சிக்கல் . கொதி நிலையில் போராட்டம்

தமிழர் பகுதியில் அநுரவின் எம்பிக்கு பெரும் சிக்கல்  கொதி நிலையில் போராட்டம்



கடுமையான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய நாடு முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் 25000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வடக்கு - கிழக்கு பகுதிகளில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தவிர்த்து பிறருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் போராட்டம் ஒன்றை மேற்கொண்ட மக்கள் கிராம சேவகர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்ளுள் உள்ளக அரசியல் குறித்து தெரிவித்து நியாயம் கோரியுள்ளனர்.

No comments: