News Just In

12/03/2025 06:25:00 AM

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஆபத்தான மரங்கள் அகற்றும் பணிக்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றி!


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஆபத்தான மரங்கள் அகற்றும் பணிக்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றி!




Nifras sim
அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் எமது வைத்தியசாலை வளாகத்தில் அபாயம் விளைவிக்கும் நிலையில் காணப்பட்ட மரங்களை அவசரமாக அகற்றும் அத்தியாவசியப் பணிக்கு உடனடியாக நிதியுதவி அளித்து உதவிய அனைவருக்கும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!


வைத்தியசாலையின் பாதுகாப்பு கருதி, மரங்களை அகற்றுவதற்கான செலவான ரூபாய் 35,000/- (முப்பத்தைந்தாயிரம்) ஐச் சேகரிக்கும் அவசர வேண்டுகோளுக்கு உடனடியாக செவிமடுத்தீர்கள். உங்கள் தாராளமான பங்களிப்பினால், இந்தப் பணி குறித்த தினத்திலேயே (டிசம்பர் 02 இன்று) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
இந்த அத்தியாவசிய பணிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்

அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்

திரு. க. லோகேந்திரன் (தலைவர்) ரூ. 5,000/=

உப பொருளாளர் கே. நவநீதன் ரூ. 5,000/=

திரு. கான்டிபன் அவர்கள் ரூ. 5,000/=

பிரதேச தனவந்தர்கள்

அல்ஹாஜ் ஹலால்தீன் (தவிசாளர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி) ரூ. 10,000/=

திரு. சோமசுந்தரம் (குட்டி அண்ணன் - பெற்றோல் செட் உரிமையாளர்) ரூ. 10,000/=

மொத்தமாகச் சேகரிக்கப்பட்ட நிதி ரூ. 35,000/=

நிதி கையளிப்பு

சேகரிக்கப்பட்ட முழுமையான ரூ. 35,000/- பணமானது, மரங்களை வெட்டுவதற்காகப் பணியாற்றிய வேலை ஆட்களுக்கு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சரவணன் அவர்களுடன் இணைந்து எமது அபிவிருத்தி குழுவின் தலைவர் திரு. க. லோகேந்திரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

உங்கள் உடனடி பங்களிப்பினால், வைத்தியசாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் காட்டிய அக்கறைக்கு அபிவிருத்தி குழு சார்பாக மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள்!

உப செயலாளர்,
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்(JP),
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு.

No comments: