News Just In

12/16/2025 09:26:00 AM

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 18 நாட்களின் பின்னர் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 18 நாட்களின் பின்னர் காத்திருந்த இன்ப அதிர்ச்சி



நுவரெலியாவில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சொந்தமான உடமைகள் 18 நாட்களின் பின்னர் கிடைத்துள்ளது.

ஹங்குரான்கெத்த பகுதியில் மண்சரிவினால் முழுமையாக அழிவடைந்த வீட்டினை சுத்தம் செய்யும் பணி இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டது.

துப்பரவு பணியின் போது சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 5 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பணம் என்பன இராணுவத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக அதிகாரிகள், மக்கள் முன்னிலையில் இராணுவத்தினால் இவை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: