மில்லர் திரைப்படத்தின் பின்னணியில் யாரும் அறியாத பெரும் சதி!
விடுதலைப் போராட்டத்தை அடிப்டையாகக் கொண்டு 'கெப்டன் பிரபாகரன்' என்ற தென்னிந்திய திரைப்படம் 1991ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
அப்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் பலமாக இருந்தனர்.
அந்த காலத்தில் குறித்த திரைப்படத்துக்கு எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. அதேபோல, 'கெப்டன் மில்லர்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்த போதும் எதுவும் நடக்கவில்லை.
ஆனால், யாரவது ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்து திரைப்படம் எடுத்தால் உடனே அனைவருக்கும் ஒரு தேசிய உணர்வு வந்து விடும் என அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறாமை ஆகியவற்றின் வெளிப்பாடு என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஈழத்தமிழர்களின் படங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தடுப்பதில் தென்னிந்திய திரைப்படங்களின் தலையீடுகளும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திரைப்பட ரீதியாக எங்களுடைய முன்னேற்றத்துக்கு தென்னிந்திய சினிமா பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக ஒரு ஈழத்தமிழ் இயக்குனர் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
11/08/2025 05:40:00 AM
மில்லர் திரைப்படத்தின் பின்னணியில் யாரும் அறியாத பெரும் சதி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: