News Just In

11/16/2025 02:57:00 PM

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை!


தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை



அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியே இச்ச ம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும் 14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸாருக்கு நேற்று மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: