News Just In

11/23/2025 06:07:00 AM

‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ பாட்டுப் பாடும் விஜய் கூட மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை: சீமான்

‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ பாட்டுப் பாடும் விஜய் கூட மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை: சீமான்


: “பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. திருநெல்வேலியில் சீமான் தங்கியிருந்த கட்சி நிர்வாகி திருமண மண்டபத்தின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அவர் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

No comments: