
நேற்றைய தினம், கடுகண்ணாவவில் ஏற்பட்ட பாறை சரிவில் உயிரிழந்த 6 பேரில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என்பவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுகண்ணாவவில் இருந்த ரொட்டி கடை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் கடை மீது பாரிய பாறை ஒன்று விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில், கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் கல்வி கற்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் விரிவுரையாளராக இருந்த மாவனெல்ல சியம்பலாபிட்டிய, வெலிகல்லவைச் சேர்ந்த லஹிரு சமரக்கோன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
31 வயதான அவர், வழக்கமாக குறித்த இடத்திற்கு தேநீர் பருக செல்வதாகவும், நேற்றும் வழக்கம் போல் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் அவரது கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அது சிறிதளவு சேதமடைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
No comments: