News Just In

11/05/2025 05:40:00 PM

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: ஏறாவூர் பொலிஸில் சரணடைந்த கணவன்


வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: ஏறாவூர் பொலிஸில் சரணடைந்த கணவன்


வவுனியா, பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மாயமான அவரது கணவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது மகள் சடலமாக கிடந்துள்ளார்.
கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகி இருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரான கணவன் நேற்று (04.11) மாலை ஏறாவூர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

No comments: