News Just In

11/05/2025 04:05:00 PM

உடன்பிறந்த சகோதரனுடன் பாலியல் உறவு ; கர்ப்பமான 22 வயது பெண்

உடன்பிறந்த சகோதரனுடன் பாலியல் உறவு ; கர்ப்பமான 22 வயது பெண்



உடன்பிறந்த சகோதரனை தொடர்ச்சியாக அச்சுறுத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட நிலையில் கர்ப்பமான பெண் ஒருவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிஷாந்த பிரதிப் குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன் தாய் இல்லத்தரசியாக இருக்கின்றதாக தெரியவந்துள்ளது.

சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது சகோதரிக்கு 18 வயதாகிய நிலையில் இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது என ​பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இதற்கு உடன்பிறந்த சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த போதும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் மிரட்டிய சகோதரி தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது 22 வயதான குறித்த பெண்ணின் வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: