
யார் எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் அடுத்த வருடம் மூன்றாவது காலாண்டில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
டிஜிட்டல் கட்டமைப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு டிஜிட்டல் அடையாள அட்டையை அடுத்த வருடம் மூன்றாவது காலாண்டில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
டிஜிட்டல் அடையாள அட்டைக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்க நீதிமன்றம் எடுத்த முடிவு தொடர்பிலும் ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
நேற்று (08) பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
No comments: