News Just In

10/31/2025 09:12:00 AM

அம்பாறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகம்.!

 அம்பாறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகம். வைக்கோலை தாளிடும் கலப்பை இத


அறுவடை செய்யப்பட்ட வயலில் உள்ள வைகோலை மீண்டும் புரட்டி அதே மண்ணில் தாளிடுவதற்கு இந்த கலப்பை உபயோகப்படுத்தப்படுகிறது.
அம்பாறையில் சம்மாந்துறை பகுதியில் இந்த புதிய கலப்பையை ஒரு விவசாயி கொள்வனவு செய்து வயலில் பயன் படுத்தி வருகிறார்.
நிலத்துக்கு தேவையான முக்கிய அரிய கனிப்பொருள் சிலிக்கனாகும். அந்த சிலிக்கன் என்ற கனிப் பொருள் வைக்கோலில் நிறையவே இருக்கின்றது எனவே வைக்கோலை எரிக்காது நிலத்திலே தாளிடுதல் மிகுந்த பிரயோசனப்படும். மண்ணும் வளமாகும். பயிரும் செழிப்பாக வளர்ந்து நல்ல அறுவடையை தரும்

No comments: