News Just In

10/08/2025 11:01:00 AM

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலைக்கு மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள்!

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலைக்கு மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள்!


நூருல் ஹுதா உமர்
மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டி திங்கட்கிழமை (06) மூதூர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் ஈத் தக்பீர் கூறும் பிரிவில் தங்கப்பதக்கத்தை பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உயர்தரப் பிரிவு மாணவிகளுக்குரிய அல் ஹிகாயா வல்பைத் நிகழ்ச்சியில் வெள்ளிப்பதக்கத்தையும், அரபு எழுத்தணி போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு இதற்கான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கிய கல்லூரி முதல்வர் ஏ.அப்துல் கபூர், பிரதி, உதவி அதிபர்கள் இதற்காக அம் மாணவர்களை பயிற்றுவித்து வழிப்படுத்திய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு அஷ்றக் சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

No comments: