
காசா தரைப்பகுதி மீது ‘கடுமையான தாக்குதல்களை’ நடத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை மீண்டும் மீண்டும் மீறுவதாகக் குற்றம்சாட்டி, ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக “கடுமையான தாக்குதல்களை” நடத்தவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.
இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று (28) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தத்தை மீறியதால் பிரதமர் நெதன்யாகு, காசா பகுதியில் உடனடி தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: