சுகாதார அமைச்சுக்கு முன்பாக அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம்!
அபு அலா
அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (15) மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெறறது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை மற்றும் திருகோணமலை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் பங்கேற்று, ஆட்சியாளர்களே "ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் மேலதிக சேவைக் கொடுப்பினை பெறுவதற்கு உரிமை உண்டு", "மேலதிக கடமை நேர கொடுப்பனவை உடனடியாக வழங்கு", "ஆயுர்வேத வைத்திய சேவையின் சம்பள ஏற்றத்தாழ்வை உடனடியாக நீக்கு", "சம்பள மறுசீரமைப்பு எங்கே", "நிர்வாகமே மமதை வேண்டாம்", "பிரச்சனைக்கு தீர்வைத்தா", "பிரச்சினைக்கு முகம் கொடுக்க அமைச்சருக்கு முதுகெலும்பில்லை", "ஆயுர்வேத வைத்தியர்களின் உரிமைகளை பாதுகாப்போம்" என்ற பதாகைகளை ஏந்தியவாறு வைத்தியர்கள் கோசமிட்டனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் சேவை கொடுப்பனவுகள் எந்தக் காரணமும் இல்லாமல் நிறுத்தப்பட்டு 10 மாதங்கள் ஆகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து தெரியப்படுத்தியும், அதைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையின் மருத்துவ அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் இந்த கவனியேற்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைவாக, கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களும், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இன்றைய தினம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் கூடுதல் சேவை கொடுப்பனவை குறைத்துள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் குறித்த அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

No comments: