News Just In

10/24/2025 08:52:00 AM

குருக்கள்மடம் பகுதியில் மீண்டும் சஞ்சரிக்கும் காட்டு யானைகள்!

குருக்கள்மடம் பகுதியில் மீண்டும் சஞ்சரிக்கும் காட்டு யானைகள்!




மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் இன்றைய தினம்இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்தக் காட்டுயானைகள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக களுவாஞ்சிக்குடி பிரதேசம் முழுவதும் உணவுதேடி சுற்றித்திரிந்து அச்சுறுத்தி வருவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் காட்டு யானைகள் கூட்டத்தினை வனப்பகுதிகளுக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: