உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் தமிழர் ஒருவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம் பெற்றுள்ளார்.
நீலகிரியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் அசோக்குமார் வீரமுத்து, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் பப்ளிஷர்ஸ் இணைந்து வெளியிட்ட உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இது, இந்திய அறிவியல் சமூகத்திற்கும், நீலகிரி மாவட்டத்திற்கும் பெரும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.இந்த பட்டியல், உலகளாவிய அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு செய்த விஞ்ஞானிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதில், ஆராய்ச்சி கட்டுரைகள், மேற்கோள்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகியவை மதிப்பீட்டு அளவுகோல்களாக பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை போன்ற துறைகளில் விஞ்ஞானி டாக்டர் அசோக்குமார் வீரமுத்து பங்களித்துள்ளார்.
அவருடைய ஆராய்ச்சி உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவர் முன்னணி சர்வதேச இதழ்களில் 130-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார் மற்றும் உலகெங்கிலும் உள்ள 18 பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பை நிறுவியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், இந்தியாவின் அறிவியல் திறனும், பசுமை வளர்ச்சிக்கான பங்களிப்பும் உலக அரங்கில் வெளிப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
நீலகிரியின் இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும், அறிவியல் வளர்ச்சியில் பங்களிப்பதிலும் இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
No comments: